செய்திகள் :

`சிறந்த நீர் நிலைகள் பராமரிப்பு' - மத்திய அரசின் விருதுக்கு நெல்லை மாவட்டம் தேர்வானது எப்படி?

post image

தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்குகின்றன. குளங்கள் சீரமைப்பு, ஏரிகள் மற்றும் கண்மாய்களைப் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் சில மாவட்டங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் நீர் நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் மாவட்டங்களை மத்தியரசு தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

இந்தாண்டில் இந்த விருது பெற தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் விண்ணப்பித்த நிலையில், நெல்லை மற்றும் நாமக்கல் மாவட்டங்களை மட்டும் மத்தியரசு விருது பெற தேர்வு செய்துள்ளது.

சீரமைக்கப்பட்ட தாமிரபரணி ஆறு

நெல்லை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விண்ணப்பத்தில், நெல்லையில் மோசமான நிலையில் இருந்த பல குளங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆறு– கருமேனியாறு – நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் நதிநீர் இணைப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

தாமிரபரணி நதியை செம்மைபடுத்தி வருவதால் தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய அருகாமை மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டதன்படி நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? நீர் நிலைகளில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறதா? என மத்திய நீர்வளத்துறை விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வளத்துறையின் முதுநிலை விஞ்ஞானி ராஜ்குமார் மற்றும் செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நெல்லை மாவட்டத்திற்கு வந்தனர்.

தாமிரபரணி ஆற்று பயன்பாட்டினை கண்காணிக்கும் சிசிடிவி கேமரா

வண்ணாரப்பேட்டை பலாப்பழ ஓடை, வேய்ந்தான்குளம், தாமிரபரணி ஆற்றுப்படுகை, மழை நேரங்களில் ஓடும் வெள்ளம் தாமிரபரணியில் கலக்கும் வாறுகால்கள் ஆகிய பகுதிகளில் 3 நாள்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் மத்தியரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். இந்தியாவிலேயே நதிநீர் இணைப்புத் திட்டமாக தாமிரபரணி ஆறு– கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத்திட்டத்தை சாத்தியப்படுத்தியதே நெல்லை மாவட்டம் விருது பெற முக்கியக் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.  

``அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு..'' -திமுக எம்எல்ஏ விமர்சனம்; கே.என்.நேருவின் பதில்

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நட... மேலும் பார்க்க

திருச்சி: ``ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது.." - தொல்.திருமாவளவன்

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"ஜூன் 14-ம் தேதியான நாளை மாலை 4 மணி அளவில் அண... மேலும் பார்க்க

TVK: ``டோல்கேட் வேல்முருகனை வைத்து திமுக கீழ்த்தரமாக ஆடுகிறது!'' - தவெக கடும் விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது விழா என்ற பெயரில் பரிசுகளை வழங்கி வருகிறார். இந்நிகழ்வு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இப்படி பேசுகிறார்'' - செல்லூர் ராஜூ

மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தால் அனைவரும் வேதனையில் உள்ளோம். இறந்தவர்களின... மேலும் பார்க்க

அமெரிக்க இராணுவ விழா: ``பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு அழைப்பு..'' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழா ஜூன் 14 சனிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பிறந்தநாளுடன் இணைந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. வாஷிங்டனில் ஒரு பெரிய அளவிலான விழா, அணிவகுப்புடன் நட... மேலும் பார்க்க

மா.செ.கூட்டத்தில் அன்புமணி; `மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்' - யூ-டர்ன் போடும் ராமதாஸ்!

நேற்று செய்தியாளரை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், '2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன்' என்று கூறியிருந்தார். ஆனால், இன்று நடந்த செய்தியாளர் சந்... மேலும் பார்க்க