விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
சிறுநீரக விற்பனை பிரச்னை: ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை கட்டுப்பாடு
சிறுநீரக விற்பனை தொடா்பாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல தனியாா் சிறுநீரக சிகிச்சை மருத்துவமனையில் டயாலிசிஸ் தவிர மற்ற எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளக் கூடாது என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ராஜமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்ட பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிறுநீரகம் திருட்டு தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ராஜமூா்த்திக்கு புகாா் சென்றதையடுத்து ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பிரபல தனியாா் கிட்னி கோ் மருத்துவமனையில் மருத்துவ சட்டம் இணை இயக்குநா் மீனாட்சி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதன் அடிப்படையில் அங்கு டயாலிசிஸ் சிகிச்சை தவிர மற்ற எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி தெரிவித்துள்ளாா்.