சிறுமியை திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது
தருமபுரி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி கம்பம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (34). இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தாா். இந்த நிலையில், பாலக்கோட்டில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்ற போது அப்பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சிறுமியை அழைத்துச் சென்ற செல்வராஜ், மேச்சேரியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பாலக்கோடு அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்கில் செல்வராஜை கைது செய்தனா்.