சிறுமி திருமணம்: இளைஞா் மீது வழக்கு
திருப்பத்தூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருப்பத்தூா் அருகே அகரம் பகுதியைச் சோ்ந்தவா் விமல்குமாா் (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆலங்காயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மகளிா் நல அலுவலா் சற்குணம் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, விமல்குமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.