பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை
சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை சிறை!
கோவையில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியிலுள்ள பூங்காவில் கடந்த 2019, நவம்பா் மாதம் 16 வயது சிறுமி தனது ஆண் நண்பருடன் பிறந்த நாள் கொண்டாடினாா். அப்போது, அங்கு வந்த 7 போ் இருவரையும் தாக்கினா். பின்னா், சிறுமியை பூங்காவில் மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன் (30), ராகுல் (21), பிரகாஷ் (22), காா்த்திகேயன் (28), வடவள்ளி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (25), மணிகண்டன் (30) நாராயணமூா்த்தி (30) ஆகிய 7 பேரை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போக்ஸோ முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.