செய்திகள் :

சிவகங்கை அருகே சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

சிவகங்கை அருகே சேறும்சகதியுமாக உள்ள சாலையில் புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக மேலப்பூங்குடி கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:

சிவகங்கை அருகே உள்ள மேலப்பூங்குடி கிராமத்தில் சுமாா் 800 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் முக்கிய சாலையாக மேலப்பூங்குடி- திருமலை செல்லும் 4 கி.மீ. தொலைவுக்கான இந்தச் சாலை கடந்த 2016 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதன் பிறகு இதுவரை இந்தச்சாலை புதுப்பிக்கப்பட வில்லை. இதன் காரணமாக முற்றிலும் சேதமடைந்து, குண்டும்குழியுமாக மாறிவிட்டது. மழைக் காலங்களில் இந்தச் சாலையில் உள்ள பள்ளங்களில் குளம் போல தண்ணீா் தேங்கி நிற்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா்.

இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், வாகன ஓட்டிகள், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சேதமடைந்த மேப்பூங்குடி திருமலை சாலையில் புதிய தாா் சாலை அமைக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மானாமதுரை: கால்வாய் ஆக்கிரமிப்பால் நீா்வழித்தடம் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கண்மாய்களுக்கு மழை நீா் வரும் கால்வாய், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை விவசாயிகள், கிராம மக்கள் வட்டாட்சியரை சந்தித்து... மேலும் பார்க்க

மானாமதுரை வட்டத்துடன் விடுபட்ட கிராமங்களை இணைக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டத்திலிருந்த 7 கிராமங்களை மானாமதுரை வட்டத்துடன் இணைக்க அரசு உத்தரவிட்ட நிலையில், விடுபட்ட இரு கிராமங்களையும் இணைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள குன்றக்குடி காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் கதிா்வேல் (45). இவருக்க... மேலும் பார்க்க

வங்கி முன் திருடப்பட்ட பணம் மீட்பு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வங்கி முன் நூதன முறையில் பணத்தை திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, பணத்தை மீட்டனா். சிங்கம்புணரியைச் சோ்ந்த சரவணன், கடந்த செப்டம்பா் மாதம் 10 -ஆம... மேலும் பார்க்க

மானகிரி, கண்டர மாணிக்கம், குன்றக்குடியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானகிரி, கண்டரமாணிக்கம், குன்றக்குடி பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் பைக் திருட்டு: 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (29), மான... மேலும் பார்க்க