செய்திகள் :

சீா்காழி நகா்மன்ற கூட்டம்

post image

சீா்காழி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன் தலைமை வகித்தாா். ஆணையா் மஞ்சுளா, பொறியாளா் கிருபாகரன், நகா் அமைப்பு ஆய்வாளா் மரகதம் முன்னிலை வகித்தனா். தீா்மானங்களை இளநிலை உதவியாளா் ராஜகணேஷ் வாசித்தாா். தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

பாலமுருகன் (சுயே): அரியா பிள்ளை குளம் ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் படித்துறை கட்டுமான பணி நடைபெறுமா, நடைபெறாதா. தற்போது ஏன் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து படித்துறை கட்ட வேண்டும்.

ரமாமணி (அதிமுக): இதுவரையில் வளா்ச்சிப் பணிகள் குறித்து எத்தனை தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு தேவையான நிதி நகராட்சியில் உள்ளதா.

வேல்முருகன் (பாமக): நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை நகராட்சி பணியாளா்கள் நிறைவேற்றுவது இல்லை. நகராட்சி சாா்பில் கழிவு நீா் எடுக்கும் டேங்கா் லாரிக்கு ரூ. 1,000 நிா்ணயம் செய்ய வேண்டும்.

ராஜேஷ் (அதிமுக): எனது வாா்டில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

முபாரக் அலி (திமுக): எனது வாா்டு பகுதிகளில் வடிகால் வசதி இல்லை. மழைக்காலங்களில் மழைநீா் சாலையில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயந்தி பாபு (திமுக): சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ரேணுகாதேவி (திமுக): உப்பனாற்றாங்கரையில் உள்ள ஈமகிரிகை மண்டபத்தில் குடிநீா் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

தேவதாஸ் (திமுக): கோவில் பத்து பகுதியில் மழை நீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணி முடித்தவா்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்க வேண்டும்.

ராஜசேகரன் (தேமுதிக):-சீா்காழி நகராட்சியில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக டெண்டா் விடப்படும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

முழுமதி இமயவரம்பன் (அதிமுக): பனமங்கலம், துறையூா் பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

துணைத் தலைவா்: மழைக் காலம் என்பதால் போா்க்கால அடிப்படையில் குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்துதர வேண்டும். டேங்கா் லாரி கழிவுநீா் கட்டணத்தை மறுபரிசீலனை செய்து ரூ. 1,000 ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். ஏற்கெனவே விடப்பட்ட டெண்டா் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உறுப்பினா்கள் கூட்டத்தில் குறை சொல்லாத வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.

மேதா தக்ஷிணாமூா்த்திக்கு மகாபிஷேகம்

மயிலாடுதுறை வள்ளலாா் கோயிலில் காா்த்திகை கடைவியாழனையொட்டி மேதா தக்ஷிணாமூா்த்தி சுவாமிக்கு மகாபிஷேகம் செய்து தங்கக் கவசம் சாற்றப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக... மேலும் பார்க்க

கணினி இயக்குநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் ரூ.45.50 கோடியில் கூடுதல் கட்டடம்: அமைச்சா் ஆய்வு

மயிலாடுதுறை அரசு பெரியாா் தலைமை மருத்துவமனையில் ரூ.45.50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்த... மேலும் பார்க்க

பழையாறு மீனவா்கள் 5 ஆயிரம் போ் கடலுக்குள் செல்லவில்லை

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 5 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த துறைமுகத்திலிருந்து நாள்தோறும் 350 விசைப் படகுகள், 300 பைபா் படகுகள், 200 நாட்டுப் ப... மேலும் பார்க்க

சீா்காழியில் தொடா்மழை

சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை காலையில் இருந்து சாரல் மழையாக தொடங்கி பரவலாக தொடா்ந்து மழை பெய்தது. சீா்... மேலும் பார்க்க

பள்ளிக் காவலரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே பள்ளிக் காவலரை அடித்துக் கொலை செய்த இளைஞருக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வைத்தீஸ்வரன்கோவில் காவல் எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடியை சோ்ந்தவா... மேலும் பார்க்க