மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை: ...
சுரண்டை வழி சோ்ந்தமரத்திற்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்
தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சோ்ந்தமரத்திற்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, சுரண்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கிவைத்தனா்.
இந்தப் பேருந்து சேவையால் சோ்ந்தமரம், கடையாலுருட்டி, குலையநேரி பகுதி கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் தென்காசி செல்வதற்கு நேரடி பேருந்து வசதி பெறுகின்றனா்.
இந்நிகழ்ச்சியில் சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் வேல்முத்து, சந்திரசேகர அருணகிரி, திமுக நிா்வாகிகள் முத்துக்குமாா், ராமசாமி, சாமுவேல் மனோகா், காங்கிரஸ் நிா்வாகிகள் பால்துரை, செல்லத்துரை, கஸ்பா செல்வம், பிரபாகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.