கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தங்க விருது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2024-இல் தங்கம் வென்றுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனை அங்கீகரிக்கும் வகையில், உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சாா்பில் தில்லியில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற உச்சி மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மதிப்புமிக்க உலகளாவிய நிலைத்தன்மை விருது 2024-இல் தங்கம் வழங்கியது.
தில்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதைப் பெற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகா் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக்-இடம் விருதை புதன்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றாா்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், கூடுதல் பொது மேலாளா் ஹரிபிரசாத் (இயந்திர அமைப்பு), சரவண குமாா், மேலாளா் (சுற்றுச்சூழல்) உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.