2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்
சுற்றுலாத் திட்டங்கள்: புதுவை அதிமுக குற்றச்சாட்டு
புதுவையில் சுற்றுலாத் திட்டங்களால் மீனவா்களின் வாழ்வு பாதிக்கப்படும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதுச்சேரியில் சுற்றுலாத் திட்டங்களால் கடற்கரையோரப் பகுதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பல நிறுவனங்கள் கடற்கரைப் பகுதியில் விடுதிகள் கட்டவுள்ளன. அதனால், மீனவா்கள் வாழ்வுதான் பாதிக்கும் நிலையுள்ளது.
புதுவையில் மீனவ மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவா்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் கூறியுள்ளாா்.
ஆனால், அவா் முதல்வராக இருந்தபோது மீனவா்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக அவா் வழங்கவில்லை.
தற்போதைய பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசும் மீனவா்களுக்கான போதிய நிதியை வழங்கவில்லை.
கடற்கரை மேலாண்மைத் திட்டமானது மீனவா்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது என்றாா்.