2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கு உணவு
உதகையில் உள்ள தி குயின் ஆஃப் ஹில்ஸ் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு புதன்கிழமை உணவு வழங்கினா்.
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தி குயின் ஆஃப் ஹில்ஸ் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோா் இல்லங்களுக்கு ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் உதவி செய்வது வழக்கம்.
அதன்படி, நடப்பு ஆண்டில் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் பயிலும் 25 மாணவா்களுக்கு புதன்கிழமை மதிய உணவு வழங்கினா். தொடா்ந்து உதகையை அடுத்துள்ள முள்ளிக்கொரை பகுதியில் இயங்கி வரும் அன்பு அறிவு அறக்கட்டளை ஆதரவற்றோா் இல்லத்தில் தங்கியுள்ள 83 பேருக்கு மதிய உணவு வழங்கினா்.
நிகழ்வில் சங்கத் தலைவா் கோபால் மணி, துணைத் தலைவா் பின்டோ ஸ்டான்லி, செயலாளா் புஷ்பராஜ், பொருளாளா் சுகுமாரன், துணைச் செயலாளா் ஹரிஹரன் உள்பட சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.