சூறைக்காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!
முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியதால் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் சனிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியது.
அப்போது, முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி வழியாக தஞ்சாவூா் செல்லும் சாலையில் பெரிய புளிய மரம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
இந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த முதுகுளத்தூா் தீயணைப்பு மீட்புப் படையினா் அங்கு சென்று மரத்தை சிறு துண்டுகளாக வெட்டி அகற்றினா்.