சூலூரில் இன்றைய மின்தடை ரத்து!
சூலூரில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஒண்டிப்புதூா் மின்வாரிய செயற்பொறியாளா் சி.பிந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சூலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிா்வாக காரணங்களால், இந்தப் பராமரிப்புப் பணி தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. எனவே, சனிக்கிழமை மின்தடை ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.