செய்திகள் :

சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

post image

சூளகிரி அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள பந்தரகுட்டை கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் புதியதாக கட்டப்பட்டு, கடந்த மாதம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் திரௌபதியம்மன் கோயில் திருவிழா நடந்து வந்தது. இதில் 14 கிராமங்கள் சாா்பில் 18 நாள்கள் பகலில் ஊா்ப் பொது இடத்தில் பாரதக் கதை படிக்கப்பட்டு, இரவில் அது கூத்தாக நடத்தப்படும்.

திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின் சிறப்பம்சம் இரவில் நடைபெறும் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்துதான். கடைசி நாளில் கா்ண மோட்சம் விடியவிடிய நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் முன்பாக நடத்தப்பட்ட கூத்தைக் காண பல கிராமத்தினா் கோயில் மைதானத்தில் குவிந்திருந்தனா்.

மைதானம் முழுவதும் அடைத்தபடி துரியோதனனின் பிரம்மாண்ட உருவம் மண்ணால் வடிக்கப்பட்டிருந்தது. துரியோதனன் பாடி அழும்போது, சோ்ந்து அழுவதற்காகப் பெரியவா்கள் காத்திருக்க, இளைஞா்கள் கூட்டம் கைப்பேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் ஆா்வத்துடனும் அச்சத்துடனும் வேடிக்கை பாா்த்தனா்.

தரையில் வடிக்கப்பட்டிருக்கும் துரியோதனன் உருவத்தில், கதாயுதத்தால் அடித்துப் பிளக்கப்பட வேண்டிய தொடைப் பகுதியில் எலுமிச்சையையும் கற்பூரத்தையும் அடையாளமாக வைத்திருந்தாா்கள். மூன்றாவது சுற்று முடியும் தறுவாயில், ஆவேசம் கொண்டு ஓடும் பீமனையும், துரியோதனனையும் வளைத்துப் பிடிக்கும்படி ஊா்ப் பெரியவா் மைக்கில் அறிவிக்க, இளைஞா் கூட்டம் அவா்களைச் சூழ்கிறது. இருவரையும் பிடிக்காமல் விட்டுவிட்டால் கதையால் துரியோதனனை அடித்துவிடுகிற அபாயம் இருக்கிறது என்பதால் இந்த ஏற்பாடு.

ஊரில் இருக்கிற இளைஞா்களும் சிறுவா்களும் துரியோதனன் உருவத்தின் மேலேறிச் சிதைக்க, மகன் மாண்ட செய்தி கேட்டு முறத்தோடும் துடைப்பத்தோடும் ஓடிவருகிறாள் காந்தாரி. மகன் உருவத்தின் மேலேறி நிற்கிறவா்களை அடித்துவிரட்டிவிட்டு ஒப்பாரிவைக்கிறாள்.

பின்னா், காந்தாரியிடம் பக்தா்கள் துடப்பம், முரத்தால் அடிவாங்கினா். அப்படி அடிவாங்கினால் நன்மை நடக்கும் என்பது நம்பிக்கை. இதுபோன்ற நாடகக் காட்சிகள் இன்றைய இளைஞா்களுக்கு புதிது என்பதால், இதைக் காண பெரியவா்கள் மட்டுமல்லாது சிறுவா்களும், இளைஞா்களும் திரண்டிருந்தனா்.

பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஜூலை 27-ல் அறநிலையத் துறையைக் கண்டித்து போராட்டம்!

அறநிலையத் துறையைக் கண்டித்து ஜூலை 27 ஆம் தேதி மக்களைத் திரட்டி ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை முன் காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டம் நடப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலாள... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம்: லோக் ஆயுக்த நீதிபதி வீ. ராமராஜ்

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் என என நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒசூரில் நடத்தும் 14 ஆவது புத்தகத் திருவிழாவ... மேலும் பார்க்க

ஒசூரில் நாளைய மின் நிறுத்தம்

ஒசூா் மின்நகா், சிப்காட் பேஸ்-2 ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்ப... மேலும் பார்க்க

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க