செய்திகள் :

"சூழ்நிலைக் கட்டாயத்திற்காக உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது! - ஐஸ்வர்யா ராய் அறிவுரை!

post image

79-வது கான் திரைப்பட விழா நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. லோரியல் பாரிஸ் பிராண்டின் அம்பாசிடராகப் கான் திரைப்பட விழாவில் பல வருடங்களாக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

இந்தாண்டும் அவருடைய தனித்துவமான காஸ்டியூமில் கலந்துகொண்டிருக்கிறார்.

Aishwarya Rai|நடிகை ஐஸ்வர்யா ராய்
Aishwarya Rai|நடிகை ஐஸ்வர்யா ராய்

அங்கு ஊடகத்தினரிடம் பேசிய ஐஸ்வர்யா ராய் திரைத்துறைக்கு வர விரும்பும் புதிய தலைமுறையினருக்குச் சில வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.

அவர், "சினிமாவுக்குள் நுழையும் புதியவர்கள், முதலில் தங்களுக்குள் இருக்கும் உண்மையான ஆர்வம் எது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும்.

ஏனெனில், உங்களது அந்த ஆர்வம்தான் கடினமான சூழ்நிலைகளிலும் உங்களை முன்னோக்கிச் செல்ல உதவும் அடித்தளமாகும். கலைத்துறையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருக்க வேண்டும்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

பிறருக்காகவோ அல்லது சூழ்நிலைக் கட்டாயத்திற்காகவோ உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது.

நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தத் தேர்வுகளுக்கு இறுதிவரை நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்புதான் உங்களுக்கான தனி அடையாளத்தை இந்தத் துறையில் பெற்றுத் தரும்" எனப் பேசியிருக்கிறார்.

"சச்சின், கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும்" - சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை ... மேலும் பார்க்க

Aamir Khan: ஷாருக்கான், சல்மான் கான் முன்னிலையில் திருமணம்; கௌரியை மணமுடிக்கும் ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து செய்த பிறகு இரண்டு முன்னாள் மனைவிகளிடமும் சுமூக உறவை பேணி வரும் ஆமீர் கான் கடந... மேலும் பார்க்க

'என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன், ஆனால்.!'- உடற்பயிற்சி குறித்து டாப்ஸி அட்வைஸ்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் வெளி​யானது.தொ... மேலும் பார்க்க

"நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல" - ரசிகருடனான செல்பி விவகாரம் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்

வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிப்பில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இ... மேலும் பார்க்க

Don 3 விவகாரம்: "இனி அவருடன் பணியாற்ற விரும்பவில்லை"- ரன்வீர் சிங்கின் சமரசத்தை ஏற்க பர்ஹான் மறுப்பு

நடிகர் ஷாருக்கான் நடித்து பெரிய அளவில் ஹிட்டான டான் படத்தின் மூன்றாவது பகுதியாக டான் 3 படத்தை எடுக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் முடிவு செய்து ஷாருக்கானை அனுகினார். ஆனால் அதில் நடிக்க ஷாருக்கான் மறுத்துவ... மேலும் பார்க்க

'இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை Unfollow செய்தது ஏன்?' - இயக்குநர் கரண் ஜோகர் விளக்கம்

பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜ... மேலும் பார்க்க