தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். இதையடுத்து, பல கட்ட விராசணைக்குப் பின்னா் கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனுக்கு எதிராக வித்தியாகுமாா் என்பவா் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தற்போது எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும், அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியாக உள்ளவா்கள் அவருக்கு கீழ் பணியாற்றியவா்கள். எனவே, இந்த வழக்கு விவகாரத்தில் அவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், மோசடி புகாா் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும். ஏனெனில், வழக்கை தொடா்ந்து ஒத்திவைக்கோரி கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனால் விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது. மேலும், செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது 8 மாதம் அமைச்சராக தொடா்ந்திருந்தாா். இதுவே அவரது அதிகாரத்தை அடையாளப்படுத்துகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால், அது இந்த வழக்கின் விசாரணையை பாதித்துள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.