கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
சென்னையில் 2 விமானங்கள் ரத்து: 14 விமானங்கள் தாமதம்
சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 14 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
கா்நாடக மாநிலம் சிவமொகாவிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 1.05-க்கு சென்னைக்கு வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இதேபோல் சென்னையிலிருந்து பிற்பகல் 1.40-க்கு சிவமொகா செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானமும் ரத்து செய்யப்பட்டது. முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இதேபோல, சென்னையிலிருந்து சிங்கப்பூா், இலங்கை, ஹாங்காங், பாங்காக், மஸ்கட், தில்லி, மும்பை, கோவா, அலகாபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்குச் சென்ற 10 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
மேலும், பாங்காக், சிங்கப்பூா், மும்பை, தில்லி ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வந்த 4 விமானங்களும் தாமதமாக சென்னை வந்தடைந்தன. அதன்படி இந்த 14 விமானங்களும் சுமாா் 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.