காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க முடிவு!
சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் மாதந்திர மாமன்றக் கூட்டமானது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்றயை மாமன்றக் கூட்டத்தில் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க: அண்ணா நகர் முதன்மை சாலைகளில் வாகன நிறுத்தத்திற்கு அனுமதி!
இதில், மெரீனா , பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெரீனா கடற்கரையை 1 வருட காலத்திற்கு தூய்மைப் பணியை மேற்கொள்ள 7 கோடியே 9 லட்சத்து 46 ஆயிரத்து 942 ரூபாயாக தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர், புது கடற்கரை ஒட்டுமொத்தமாக 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட 4 கடற்கரைகளுக்கும் ஒரு வருட தூய்மைப் பணி மேற்கொள்ள 4 கோடியே 54 லட்சத்து, 99 ஆயிரத்து 139 ரூபாய் தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.