விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
சென்னை: கழிவு நீர் தேங்கியதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்; பிரியாணி கடைக்காரர் கொலை; பின்னணி என்ன?
சென்னை அமைந்தகரை, ஆசாத் நகரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (47). இவர் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வீட்டில் வைத்து பிரியாணியைத் தயாரிக்கும் தமீம் அன்சாரி, அந்தப் பாத்திரங்களை வீட்டில் வைத்து கழுவது வழக்கம். அப்போது கழிவு நீர், எதிர் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதாக தமீம் அன்சாரியின் எதிர்வீட்டில் வசிக்கும் முகமது முக்தார் அடிக்கடி, தமீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்தநிலையில் கடந்த 8ஆம் தேதி தமீம் அன்சாரி குடும்பத்தினருக்கும், முகமது முக்தாருக்கும் இடையே கழிவு நீர் தேங்குவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தமீம் அன்சாரி வீட்டில் இல்லை. வெளியில் சென்ற அவர், வீடு திரும்பியதும் அவரின் மனைவி நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.
அதனால் முகமது முக்தார் வீட்டுக்குச் சென்ற தமீம் அன்சாரி, 'ஏன் என் மனைவி மற்றும் மகனிடம் தகராறு செய்தீர்கள்?' என்று முகமது முக்தாரைத் தட்டிக் கேட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த முகமது முக்தார், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தமீம் அன்சாரியின் கழுத்தில் வெட்டியிருக்கிறார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். தமீம் அன்சாரியின் அலறல் சத்தம் கேட்டு, அவரின் குடும்பத்தினர் அங்கு வந்தனர். உயிருக்குப் போராடிய தமீம் அன்சாரியை அவரின் குடும்பத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே தமீம் அன்சாரி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அமைந்தகரை காவல் நிலையத்தில் தமீம் அன்சாரியின் மகன் சாகுல் அமீது புகாரளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது முக்தாரைக் கைது செய்தனர். பின்னர் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை முகமது முக்தாரிடமிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு முகமது முக்தாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரைச் சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88