செய்திகள் :

சென்னை, புறநகரில் பகலுக்கு மேல் மழை தீவிரமடையும்!

post image

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பகலுக்கு மேல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

எனினும் வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே சனிக்கிழமை (நவ. 30) கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்துக்கு புயல் ஆபத்து இல்லை!

இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

“புயல் சின்னம் மீண்டும் வலுவடையவுள்ளது. புயலாக அறிவிப்பதற்கு 35 க்நாட்ஸ் வரை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் எட்ட வேண்டிய நிலையில், 30 க்நாட்ஸை நெருங்கியுள்ளது. 40 முதல் 45 க்நாட்ஸ் வரை வலுவடைய வாய்ப்புள்ளது.

தீவிர மேகக் கூட்டங்கள் உருவாக்கக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மரக்காணம் பகுதிகளில் இன்று பகலுக்கு மேல் மாலை, இரவு எனப் படிப்படியாக மழையின் தீவிரத்தன்மை அதிகரிக்கும்.

இன்றும் நாளையும் மிக கனமழை முதல் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை(நவ.30) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை முதல் புதுச்சேரி வரை.. வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் விரைவில் மழைத் தொடங்கப்போகிறது, மாலை அல்லது இரவிலிருந்து மழை தீவிரமடையும். ஆனால் பரவலாக கனமழை பெய்யும் என சொல்லிவிட முடியாது என்று தமிழ்நாட... மேலும் பார்க்க

தமிழகத்தின் வட கடலோர மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கவனத்துக்கு: பாலச்சந்திரன்

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புயலாக மாறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவான புயல் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 3,000 கோடியில் விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள்!!

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் ரூ. 2,990.75 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.தமிழக விமான நிலையங்களில் மேற்கொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்தில் உருவாகிறது ஃபென்ஜால் புயல்!!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நில... மேலும் பார்க்க

புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது! சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில்..

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.முன்னதாக மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த... மேலும் பார்க்க

சென்னை, செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.29) ஒருநாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ... மேலும் பார்க்க