செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!

post image

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபேவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார்.

நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டுமென்றால் அதிகளவிலான வாடகைத் தொகை செலுத்த வேண்டும்.

இதனால், விமான நிலையங்களில் தண்ணீர் முதல் உணவு வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. முதல்முறையாக விமானத்தில் செல்பவர் என்றால் உணவு வகையில் விலைப்பட்டியலை பார்த்து மயங்கிவிடுவார்கள்.

தண்ணீர் பாட்டல் ரூ. 125, இட்லி ரூ. 250, பிரியாணி ரூ. 450 என தலைசுற்றும் அளவு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, விமானத்துக்குள் 100 மி.லி. மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க : தோனியின் ’மோர்ஸ் கோட்’ டீ-சர்ட்! அப்படியென்றால் என்ன?

இந்த நிலையில், பயணிகளுக்கு குறைந்த விலை டீ, காபி, தண்ணீர் மற்றும் திண்பண்டங்களை விற்பனை செய்யும் ’உடான் யாத்ரி கஃபே’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

கொல்கத்தா விமான நிலையத்தில் முதல் கஃபே திறக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்திலும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நடத்தும் இந்த கஃபேவில் தண்ணீர் ரூ. 10, டீ ரூ. 10, காபி ரூ. 20, சமோசா, வடை உள்ளிட்டவை ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தால் விமான பயணிகள் பலரும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.நடிகை விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம்: முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் பிரநிதித்துவம் தரப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டத் திருத... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 27) திறந்து வைத்தார்.இப்புதிய மர... மேலும் பார்க்க

பெருநகர சென்னையின் கடன்தொகை ரூ. 3,065.65 கோடி: மேயர் பிரியா

பெருநகர சென்னையின் கடனுக்காக வட்டி மட்டும் ரூ. 8.5 கோடி செலுத்தப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 28)ல் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்.28 (நாளை) கடலோர தமிழகத்தில் அநேக இடங்க... மேலும் பார்க்க