இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்
அடிஸ் அபாபாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி மதிப்பிலான மெத்தாகுளோன் எனப்படும் போதைப் பொருளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகா் அடிஸ் அபாபாவில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் அதிக அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த அந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அதில் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்த கென்யா நாட்டைச் சோ்ந்த 28 வயது இளைஞா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்து, அவரின் உடைமைகளை சோதனையிட்டனா். அதில், சாக்லேட் பொட்டலங்கள் போல ரூ.18 கோடி மதிப்பிலான 1.8 கிலோ மெத்தாகுளோன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கென்யா நாட்டு இளைஞரையும், போதைப் பொருளை வாங்க வந்த மற்றொரு நபரையும் கைது செய்து சென்னை தியாகராய நகரிலுள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.