செய்திகள் :

சொக்கம்புதூரில் மயான கொள்ளை: மனித எலும்பை வாயில் கடித்து நடனமாடிய பூசாரி!

post image

கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

மகா சிவராத்திரியையொட்டி கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தின் முன்பு மேளதாளம் முழங்க நள்ளிரவு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த மயான பூஜையில் ஈடுபட்ட பூசாரி, கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மாசாணியம்மனின் களிமண் உருவத்தைச் சுற்றி ஆக்ரோசமாக நடனமாடி பூஜை செய்தார்.

அதைத்தொடர்ந்து, களிமண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மனின் இதயத்தில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து, அதிலிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி நடனமாடினார். பின்பு மாசாணியம்மனின் உருவத்தின் இதயப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம்புதூரில் உள்ள மாசாணியம்மன் கோயிலுக்குக் கொண்டு சென்று, அங்கு அந்த மண்ணை வைத்து பூஜை செய்யப்பட்டது. நள்ளிரவில் ஆக்ரோஷ நடனமாடி நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபட்டால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனைதொடர்ந்து சக்தி கரகம் அழைத்து வருவதல், அன்னதான நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளன.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி நடிப்பில் வெளியான தெலுங்கு மொழிப்படமான சங்கராந்திக்கி வஸ்த... மேலும் பார்க்க

கடலும் மர்மங்களும்... கிங்ஸ்டன் டிரைலர் வெளியீடு!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில்... மேலும் பார்க்க

மிஸ்டர். எக்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர். எக்ஸ் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் நடித்த திர... மேலும் பார்க்க

சல்மான் கானின் சிக்கந்தர் டீசர்!

நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்... மேலும் பார்க்க

சப்தம் மேக்கிங் விடியோ வெளியீடு!

நடிகர் ஆதி, லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தி... மேலும் பார்க்க