பெண் டிஐஜியிடம் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ மோசடிக்கு முயற்சி சைபா் குற்றப்பிரிவு விசாரண...
சோபாவுக்கு உள்ளே பெண்ணின் சடலம்; 2 நாளாக தூங்கிய கணவன் அதிர்ச்சி... என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் புனே ஹடப்சரில் கணவரோடு வசித்து வந்தவர் ஸ்வப்னாலி (24). இவரது கணவர் உமேஷ் டாக்சி டிரைவராக இருக்கிறார். உமேஷ் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு பீட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கிருந்து அவரது மனைவிக்கு போன் செய்தபோது போன் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே தனது நண்பரை அனுப்பி தனது மனைவி வீட்டில் இருக்கிறாரா என்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த நண்பர் வீட்டில் சென்று பார்த்தபோது ஸ்வப்னாலி வீடு பூட்டி இருந்தது.
உடனே உமேஷ் வீடு திரும்பி தனது மனைவியை தேடினார். இரு சக்கர வாகனத்தில் சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். இரண்டு நாள் தேடிய நிலையில் வீட்டில் இருந்த சில தங்க ஆபரணங்கள் காணாமல் போய் இருந்தது. உடனே வீட்டில் இருந்த படுக்கையுடன் கூடிய ஷோபாவிற்குள் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில், பொருள்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க அதனை திறந்த போது உள்ளே கொலை செய்யப்பட்டநிலையில், ஸ்வப்னாலி உடல் இருந்தது.
அந்த ஷோபாவில் தான் இரண்டு நாள்களாக உமேஷ் படுத்து உறங்கி இருந்தார். மனைவியின் உடலை பார்த்தவுடன் உமேஷ் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை நடந்தபோது உமேஷ் ஊரில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில் வீட்டிற்கு ஒருவர் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்துள்ளது.
ஸ்வப்னாலியின் வீட்டிற்கு வந்து சென்ற நபர் ஸ்வப்னாலியுடன் சில காலம் ஒன்றாக செக்யூரிட்டி கார்டாக வேலை செய்தது தெரிய வந்தது. அந்த பழக்கத்தில் அடிக்கடி வந்து சென்றுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அந்த நபரை தனது கணவரின் சித்தப்பா என்று ஸ்வவ்னாலி அறிமுகம் செய்துள்ளார்.
சனிக்கிழமையில் இருந்து அந்த நபரின் மொபைல் போன் ஆப் செய்யப்பட்டு இருந்தது. திடீரென சிறிது நேரம் போன் ஆன் செய்யப்பட்டது.
ஆனால் மீண்டும் ஆப் செய்யப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு அந்த நபர் இல்லை. அவர் பீட் மாவட்டத்தில் பதுங்கி இருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஸ்வப்னாலியை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை அந்த நபர் எடுத்துச்சென்றது தெரிய வந்ததுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb