ஜன. 13-ல் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் ஜன. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு உத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் 2025 ஜன. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.