முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஜிம்பாப்வே!
ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து பெண் பலி !
ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார்.
ஜம்மு-காஷ்மீரின் அரகம் கிராமத்தில் தனது வீட்டை விட்டு வெளியே ராகேஷ் குமாரின் மனைவி புஷ்பா தேவி வெள்ளிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கிராம பாதுகாப்பு காவலர் சந்தீப் குமாரின் துப்பாக்கியில் இருந்து குண்டு அந்த பெண் மீது பாய்ந்தது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டார்.
குதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை
குண்டு வேண்டுமென்றே சுடப்பட்டதா அல்லது தற்செயலாக சுடப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடுக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.