செய்திகள் :

ஜாமா மசூதி ஆய்வு- மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தொல்.திருமாவளவன் கடிதம்

post image

ஜாமா மசூதி ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“உத்தரப்பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளேன்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "1. வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் சம்பல் ஜாமா மஸ்ஜித்தில் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.

2. சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலி!

3. நவம்பர் 24 சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையின் தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

4. சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் தேசத்தின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் .” என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது

வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பூர் மாவட்டம் பல... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும்

ஃபென்ஜால் புயல் காரணமாக கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்களையும், விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக கீழே இறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்

புயல் கரையைக் கடக்கும் போது சென்னை ஓ.எம்.ஆர். மற்றும் ஈசிஆர் சாலையில் நாளை பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: அண்ணா பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

புயல் எதிரொலியால் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்தி... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலின் வேகம் அதிகரிப்பு

ஃபென்ஜால் புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற... மேலும் பார்க்க

புயல் எச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 29) விடுமுறை?

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வான... மேலும் பார்க்க