செய்திகள் :

ஜார்க்கண்ட்: ‘இண்டி’ கூட்டணி திடீர் முன்னிலை!

post image

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் பின்னடைவில் இருந்த காங்கிரஸ் கூட்டணி திடீர் திருப்பமாக முன்னிலை பெற்றுள்ளது.

ஜார்க்கண்டில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், காலை 10 மணி வரையிலான எண்ணிக்கையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 40 தொகுதிகளில் ‘இண்டி’ கூட்டணி முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 37 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளன.

மாநிலத்தில் ஆளும் ‘இண்டி’ கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜார்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன. இந்தத் தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இதையும் படிக்க:பேரவைத் தேர்தல் முடிவுகள் 2024: முன்னிலை நிலவரம்

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிரத்திலும் நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கும் பாஜக கூட்டணியே முன்னிலை பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாயுதி கூட்டணிக்கு ஆந்திர முதலவர் வாழ்த்து!

மகராஷ்டிரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் பார்க்க

பிரதமரின் வளர்ச்சிதான் வெற்றிக்குக் காரணம்: மத்திய அமைச்சர்

மகாயுதி கூட்டணியின் வெற்றியை நெருங்கியுள்ளதாக மத்திய அமைச்சரும், இந்தியக் குடியரசுக் கட்சியில் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி க... மேலும் பார்க்க

வயநாடு.. ராகுலின் வெற்றிச் சாதனையை முறியடிப்பாரா பிரியங்கா?

வயநாடு தொகுதியில் வெற்றி பெறும் பிரியங்கா ராகுலை தோற்கடிப்பாரா?கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3.64 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னி... மேலும் பார்க்க

பிரிட்டனில் இந்தியப் பெண் வரதட்சணை கொலை!

பிரிட்டனில் இந்தியத் தம்பதியர் இடையேயான வரதட்சணை தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரை இந்திய போலீஸாரும் பிரிட்டன் போலீஸாரும் தேடி வருகின்றனர்.இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் லம்பா (23) என்பவர், ஹர்சிதா பிரெ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி பின்னடைவு!

ஜார்க்கண்டில் கான்டே தொகுதியில் களமிறங்கிய ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா முர்மு சோரன் 3060 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது... மேலும் பார்க்க

அசாம் சாலை விபத்தில் 8 பேர் பலி, 3 பேர் காயம்

கவுகாத்தி: அசாமின் பஜாலி மற்றும் துப்ரி மாவட்டங்களில் சனிக்கிழமை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலியாகினர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் காயமடைந்த இருவரும் ஃப... மேலும் பார்க்க