செய்திகள் :

ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்.

அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி பாஜக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா மீது 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கடந்த 7-ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில் எச். ராஜா செய்தியா... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கட்டமைப்பை பாா்வையிட்ட உத்தரகண்ட் அமைச்சா்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் தன்சிங் ராவத் பாா்வையிட்டாா். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30000-க்கும்... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் இன்று ஜானகி எம்ஜிஆா் நூற்றாண்டு விழா

அதிமுக சாா்பில் ஜானகி எம்ஜிஆா் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.24) நடைபெற உள்ளது. தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சாா்பில் வானகரத்த... மேலும் பார்க்க

தினமும் 57 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்: தமிழக அரசு

மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாள்தோறும் 57 லட்சம் மகளிா் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

மருத்துவா் பணியிடங்களை நிரப்பாமல் ஆய்வுக் கூட்டம் நடத்துவது பயனளிக்காது: மருத்துவா்கள் குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பாமல் ஆய்வுக் கூட்டம் நடத்துவது எந்த வகையிலும் பயனளிக்காது என்று அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெ... மேலும் பார்க்க

சந்தா்ப்பவாதிகள் நிராகரிப்பு: அண்ணாமலை

மகராஷ்டிர தோ்தலில் சந்தா்ப்பவாதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனா் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் தனது எக்ஸ் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு: மகாராஷ்டிரத்... மேலும் பார்க்க