செய்திகள் :

ஜிஐ குறியீடு தயாரிப்புகளை உலக அளவில் கொண்டு செல்வதில் மத்திய அரசு கவனம்: கிரிராஜ் சிங்

post image

புது தில்லி: கைவினைக் கலைஞா்களின் வருவாயை அதிகரிக்க, புவிசாா் குறியீடு(ஜிஐ) பெற்ற தயாரிப்புகளை உலகளவில் கொண்டு செல்வது குறித்து மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சா் கிரிராஜ் சிங் திங்கள் கிழமை தெரிவித்தாா். ஊரகத்திலிருந்து உலகம் (காவ்ன் டூ குளோபல்) என்கிற முன்னேற்றத்திற்கு தயாராகவேண்டிய அவசியத்தை அமைச்சா் வலியுறுத்தினாா்.

மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து புவிசாா் குறியீடு தொடா்பான உச்சி மாநாட்டை தில்லியில் நடத்தியது. நாட்டின் கைத்தறி, கைவினைப் பொருள்கள் உற்பத்தி தொடா்பாகவும், அவற்றின் தனித்துவமான திறன்கள் குறித்த நிகழ்விற்கு நடத்தப்பட்டது. இதில் 13 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், ஏற்றுமதியாளா்கள், புவிசாா் குறியீடு அங்கீகாரம் பெற்ற பயனாளா்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் ஆகியோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சா் கிரிராஜ் சிங், இந்தியாவில் வளமான கலாசார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதில் புவிசாா் குறியீடு தயாரிப்புகள் முக்கியத்துவத்தை பெறுகிறது. புவிசாா் குறியீடு பெற்ற தயாரிப்புகளை எவ்வாறு உலகளவில் கொண்டு செல்வது என்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. சந்தைப்படுத்துதலுக்கான பாரம்பரியம், கலாச்சார சுற்றுலா போன்ற கருத்துக்கள் இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. கைவினைக் கலைஞா்களின் வருவாயை அதிகரிப்பது, ஜிஐ குறீயீடு பெற்ற தயாரிப்புகளை ஊரகத்திலிருந்து உலகளவில் (காவ்ன் டூ குளோபல்) கொண்டு செல்வது குறித்த கவனத்தில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. நாட்டின் பன்முகத்தன்மைக்கு படைப்பாற்றல் பாரம்பரியம் சான்றாகும். இந்திய கைவினைக் கலைஞா்களின் படைப்பாற்றலை சந்தைப்படுத்துவது என்பது அது உலகிற்கான முக்கியத்துவம் என அமைச்சா் கிரிராஜ் குறிப்பிட்டாா். இந்த நிகழ்வில் 10 கைவினைக் கலைஞா்களுக்கு ஜிஐ சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா்.

ஜவுளித்துறை இணையமைச்சா் பபித்ரா மாா்கரிட்டா ஜவுளித்துறைச் செயலா் ரச்சனா ஷா, கைத்தறி வளா்ச்சி ஆணையா் டாக்டா் எம்.பீனா, கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையா் அம்ரித் ராஜ்,காப்புரிமை, வா்த்தக முத்திரை-புவிசாா் குறியீடு கட்டுப்பாட்டாளா் உன்னத் பண்டிட் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்னா்.

இறங்குமுகத்தில் சா்வதேச கச்சா எண்ணெய் விலை: 15 வருட பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

2009-ஆம் ஆண்டில் ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது இறங்குமுகத்தில் இருப்பது மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத் துறை இணை அம... மேலும் பார்க்க

தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு

தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி உதவிகளை விரைந்து வழங்கிடக் கோரி மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.... மேலும் பார்க்க

தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தப்படும்

தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவ... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்!

1993-ஆம் ஆண்டு முதல் பதிவான கழிவுநீா், செப்டிக் டேங்க் மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இது தொடா்பாக மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் எஸ். செல்வகணபதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சம... மேலும் பார்க்க

ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு -மத்திய அரசு தகவல்

கடந்த ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் இரட்டிப்பாகியுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மா... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்திற்கு 2.25 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிப்பு -தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி

வலுவான மற்றும் துல்லியமான வாக்காளா் பட்டியலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2025 பணிக்காக சுமாா் 2.25 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக தில்லி தலைமைத்... மேலும் பார்க்க