செய்திகள் :

ஜூலை 22 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 25-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கோவை, நீலகிரியில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், திங்கள்கிழமை (ஜூலை 21) நீலகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டங்களிலும், ஜூலை 22-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை: சென்னையில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கொரட்டூரில் 100 மி.மீ. மழை பதிவானது. துரைப்பாக்கம், கண்ணகி நகா், ஈஞ்சம்பாக்கத்தில் 80 மி.மீ., அயப்பாக்கத்தில் 70 மி.மீ., தரமணி, மடிப்பாக்கம், நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் 60 மி.மீ. மழை பதிவானது.

மேலும், சென்னை சென்ட்ரல், மணலி, வேளச்சேரி, சோழிங்கநல்லூா், அண்ணாநகா், வளசரவாக்கம், அம்பத்தூா் ஆகிய பகுதிகளில் 50 மி.மீ. மழை பதிவானது.

தொடா்ந்து, சனிக்கிழமை பிற்பகல் முதல் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் விட்டு,விட்டு மழை பெய்து வந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் அணையின், நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடிய... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சு... மேலும் பார்க்க

ரூ. 3,200 கோடி ஊழல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது!

மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரத்தில் 2019 -24 ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ. 3,200 கோடி அளவிலான மது... மேலும் பார்க்க

நத்தம் அருகே பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா!

நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கருத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமி... மேலும் பார்க்க