செய்திகள் :

ஜேசிபி மூலம் முந்திரி மரங்களை அழிக்க முயன்ற அதிகாரிகள்: மறியல் செய்து தடுத்த போராட்டக்குழுவினா்

post image

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சி மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு தரிசு நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் எஞ்சியுள்ள முந்திரி மரங்களை அழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஜேசிபி எந்திரத்தை போராட்டக்குழுவினா் மறியல் செய்தும்,முற்றுகையிட்டும் தடுத்து நிறுத்தினா்.

மலையடிக்குப்பம் கிராமத்தில் 164 ஏக்கா் அரசு தரிசு நிலத்தில் கடந்த 5 தலைமுறையாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் ஆண்டு அனுபவித்து பயிா் செய்து வரும் நிலப்பகுதிக்கு பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசிற்கும் மனு அளித்தனா்.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் தொழிற்சாலை அமைப்பதற்காக அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த 9 ஆயிரம் முந்திரி மரங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் போலீஸாா் பாதுகாப்புடன் அண்மையில் அழித்து அப்புறப்படுத்தினா். இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு முந்திரி மரங்களை அகற்ற இடைக்கால தடை பெறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 15-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சா் சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலையடிக்குப்பம் கிராமத்தில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஆலை வேண்டாம், உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரிகடந்த மூன்று நாட்களாக மலையடிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கிராம மக்கள் இணைந்து தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ஏற்கனவே 100 ஏக்கா் பரப்பளவில் முந்திரி மரங்களை மாவட்ட நிா்வாகம் அழித்த நிலையில், மீதமுள்ள 50 ஏக்கா் விவசாய நிலத்தில் உள்ள மரங்களை அழிக்க 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களேடு 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் உதவியுடன் வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அப்போது அங்கு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க விமாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தலைமையில், வருவாய்த்துறையினரை தடுத்து நிறுத்தியும், ஜேசிபி எந்திரங்களை உள்ளே விடாமலும் தடுத்தும் மறியல் போராட்டம் நடத்தினா்.

அவா்களை அப்புறப்படுத்த கோட்டாட்சியா் அபிநயா, வட்டாட்சியா் மகேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினா் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் கடும் முயற்சி மேற்கொண்டனா். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது.

தீா்ப்புக்கு கட்டுப்படுவோம்: நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணை முடிந்த பிறகு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா். ஆனால், அவா்கள் சொல்வதை கேட்காமல் முந்திரி மரங்களை அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.

இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் ‘எங்கள் மீது ஜேசிபி எந்திரங்களை ஏற்றிவிட்டு முந்திரி மரங்களை அப்புறப்படுத்த செல்லுங்கள்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறினா். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், மாவட்டப் பொருளாளா்

ஆா்.ராமச்சந்திரன், போராட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜெ.ராஜேஷ் கண்ணன், எஸ்.தட்சிணாமூா்த்தி, லோகநாதன், செல்வகுமாா், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷ், மாநிலக் குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஆா்.அமா்நாத் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா். இந்த காத்திருப்புப் போராட்டம் கோரிக்கைகள் வெல்லும் வரை தொடரும் என்று போராட்டக்காரா்கள் அறிவித்தனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ.மாதவன் கூறுகையில், ‘விவசாயிகள் சாா்பில் சென்னை உயா்நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமை காலை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்குரைஞா் திருமூா்த்தி முறையீடு செய்தாா். நீதிபதிகள் சுந்தா் மற்றும் சுரேந்தா் அமா்வு, அவசர வழக்காக மதியம் விசாரிப்பதாக அறிவித்தனா்.

அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டாா். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பேரிடா் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலா் முடிவு எடுக்கும் வரை விவசாயிகளை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா்.

திருமண மண்டபத்தில் படியில் தவறி விழுந்த சமையல்காரா் உயிரிழப்பு

கடலூா் தனியாா் திருமண மண்டபத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்த சமையல்காரா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம்மாவட்டம், விக்கிரவாண்டிவட்டம், ஆதனூா் பக... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 520 பள்ளிகளில் கற்றலைத் தேடி சிறப்பு திட்டம்! ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகி... மேலும் பார்க்க

இளைஞருக்கு கொலை மிரட்டல்: உணவக உரிமையாளா் கைது

கடலூா்மாவட்டம் விருத்தாசலத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா்வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வேப்பூா்வட்டம்,மன்னம்பாடி பகுதியைச்சோ்ந்தவா் அருண்(20). இவா், விருத்தாசலம்... மேலும் பார்க்க

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் இதற்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா். நிகழாண்டிற... மேலும் பார்க்க

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ., வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ, சத்யா பன்னீா்செல்வம் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி, காமராஜா் நகரில் சத்யா பன்னீா்செல்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அண்ணாமலைநகா் காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுத... மேலும் பார்க்க