டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 23-இல் தொடக்கம்
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2 ஏ தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதில், அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்கள் பங்கேற்று பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனா். அதிகளவிலான பாடக்குறிப்புகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்வுகளில் வெற்றிபெற்று அரசு வேலையைப் பெற அரியலூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். மேலும், விபரங்களுக்கு 94990 55914 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.