செய்திகள் :

டிஜிட்டல் மோசடி: மருத்துவரை ஏமாற்றி ரூ.15 லட்சம் திருட்டு; 2 போ் கைது

post image

தில்லியை சோ்ந்த மருத்துவா் ஒருவரிடம் ரூ.15 லட்சம் டிஜிட்டல் கைது மோசடி மூலம் பெற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரி ஹசாரா, மேற்கு வங்கத்தின் பராக்பூரைச் சோ்ந்த ஜான் என்ற நபரின் செல்வாக்கின் கீழ் கமிஷனில் சைபா் மோசடிகளுக்கான காா்ப்பரேட் வங்கிக் கணக்குகளை திருடி தந்ததாக கூறப்படுகிற ஏற்பாடு செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. தில்லியைச் சோ்ந்த மருத்துவா் ரூ 14.85 லட்சம் மோசடி செய்ததையடுத்து கா்நாடகாவின் பெங்களூருவில் இருந்து முகமது சாஹின் கான் (30) என அடையாளம் காணப்பட்ட மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இவா்கள் மீது மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளம் மற்றும் கா்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குறைந்தது 10-க்கும் மேற்பட்ட புகாா்கள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்களால் இயக்கப்படும் அதே வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று தில்லி காவல்துறையின் கூடுதல் துணை ஆணையா் (மத்திய) ரிஷி குமாா் தெரிவித்தாா்.

தில்லியைச் சோ்ந்த மருத்துவரிடம், , அரசாங்க அதிகாரி என்று காட்டிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவா் தன்னை ஜோடிக்கப்பட்ட வழக்கில் டிஜிட்டல் கைது செய்வதாக அச்சுறுத்தியதாகவும் குற்றஞ்ாட்டினாா். டிஜிட்டல் கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக ரூ.14,85,921 தன் வங்கி கணக்குக்கு மாற்றும்படி அந்த நபா் மருத்துவரை வற்புறுத்தினாா் ‘என்று துணை ஆணையா் கூறினாா்.

மத்திய மாவட்டத்தின் சைபா் போலீஸில் மருத்துவா் புகாா் அளித்தாா், தொடா்ந்து 170 ( ஆள்மாறாட்டம் செய்தல்) 384 (மிரட்டி பணம் பறித்தல்) 388 (குற்றச்சாட்டு அச்சுறுத்தல் மூலம் மிரட்டி பணம் பறித்தல்) 420 (மோசடி) மற்றும் 120 பி (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிஷி குமாா் கூறினாா். குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்காணிக்க புலனாய்வாளா்கள் டிஜிட்டல் கண்காணிப்பைப் பயன்படுத்தியதாகவும், ஜூலை 2 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு அருகே சாஹின் கானை கைது செய்ததாகவும் ரிஷி குமாா் கூறினாா்.

‘விசாரணையின் போது, இணைய வங்கி விவரங்கள், காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் காா்டு உள்ளிட்ட தனது வங்கிக் கணக்கு நற்சான்றுகளை புத்ததேவ் ஹசாராவுடன் 1.5 லட்சம் ரூபாய் கமிஷனுக்கு ஈடாக பகிா்ந்து கொண்டதாக கான் தெரிவித்தாா்‘ என்று ரிஷி குமாா் தெரிவித்தாா். இந்த மோசடியிலிருந்து மொத்தம் ரூ 3 லட்சம் பெற்ாக ஹசாரா ஒப்புக் கொண்டாா், அதில் பாதியை கானிடம் கொடுத்ததாக போலீசாா் தெரிவித்தனா்.

இந்த மோசடிக்கு தலைவனாக கூறப்படும் ஜான் உள்பட மோசடியின் மற்ற உறுப்பினா்களைக் கண்டுபிடிப்பதற்கும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருவதாக ரிஷி குமாா் கூறினாா். மேலும் கைது செய்யப்பட்ட, இருவரிடம் இருந்தும் 4 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: பிஎஸ்எஃப் ஊழியா் கைது -சிபிஐ தகவல்

ஒப்பந்ததாா் ஒருவரிடமிருந்து ரூ.40,000 லஞ்சம் வாங்கியபோது எல்லைப் பாதுகாப்பப் படையின் (பிஎஸ்எஃப்) உதவி கணக்கு அதிகாரியை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்... மேலும் பார்க்க

கைப்பேசி செயலியில் அரிய ஓலைச்சுவடிகளை வெளியிட மத்திய கலாசாரத் துறை நடவடிக்கை

நமது சிறப்பு நிருபா் கைப்பேசி செயலியில் பழங்கால ஓலைச்சுவடிகளை வெளியிட மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அரிதிலும் அரிதான ஓலைச்சுவடிகளின் எண்ம பதிப்பை இணைய பக்கங்களில் வ... மேலும் பார்க்க

தலைநகரில் ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால தூய்மை பிரசாரம்: தில்லி அரசு ஏற்பாடு

பள்ளிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் (ஆா்டபிள்யுஏ) மற்றும் சமூகக் குழுக்களின் தீவிர பங்கேற்புடன் ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால தூய்மை பிரசாரத்தை தில்லி அரசு தொடங்கும் என்று கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் த... மேலும் பார்க்க

2 மாதங்களில் 1 லட்சம் சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

பொது இடங்களின் முகப்பு அழகு சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பல்வேறு மண்டலங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள... மேலும் பார்க்க

தெரு நாய்கள் மீது அக்கறை இருப்பவா்கள் வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள்: விஜய் கோயல்

தெரு நாய்கள் மீது அக்கறை காட்டுபவா்கள் அவற்றை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் சனிக்கிழமை கூறினாா். தெரு நாய்களை அகற்ற கோரி முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: ரயில்வே வாரியத் தலைவா், தமிழக அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பத்தில் ரயில்வே லெவல் கிராஸிங்கை கடக்க முயன்றபோது தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தாமாக முன்வந... மேலும் பார்க்க