செய்திகள் :

டிராவிஸ் ஹெட்டை கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிட்ட ரிக்கி பாண்டிங்..!

post image

பார்டர் - கவாஸ்கர் தொடரில் டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் 140 ரன்கள் குவித்தார். அதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஹெட்.

கடந்த 18 மாதங்களாக டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் 163 ரன்கள், ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 137 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இவரை பலரும் ஆஸி.யின் லெஜண்ட் கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள்.

3ஆவது டெஸ்ட் டிச.14ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

தலைசிறந்த வீரராக மாறி வருகிறார். தற்போதைக்கு டிராவிஸ் ஹெட் தலைசிறந்த வீரர் என்று கூறமுடியாது. ஆனால், விரைவில் அந்த நிலையை அடைந்துவிடுவார். பல நேரங்களில் அணிக்கு தேவைப்படும்போது சிறப்பாக விளையாடியுள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டிகள், ஆஷஸ் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நினைத்துப் பாருங்கள். டிராவிஸ் ஹெட் இதுமாதிரி கணங்களில் தனித்து நிற்கிறார்.

ஹெட் கிட்டதட்ட கில்கிறிஸ்ட் மாதிரி விளையாடுகிறார். கில்கிறிஸ்ட் 6,7ஆவது இடத்தில் விளையாடுவார். ஆனால், ஹெட் சிறிது முன்பாக 5ஆவது இடத்தில் விளையாடுகிறார். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது.

டிராவிஸ் ஹெட்டின் மனப்பான்மைதான் அவரை அப்படி ஆடவைக்கிறது. ஆட்டமிழக்க பயப்படுவதில்லை, எதிர்மறையான விஷயங்களுக்கு கவலைப்படுவதில்லை. அவர் செய்யும் அனைத்திலும் நேர்மறையானவற்றையே பார்க்கிறார் என்றார்.

அரையிறுதியில் அசத்திய ரஹானே (98): இறுதிப்போட்டிக்கு தேர்வானது மும்பை!

சையத் முஷடக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை - பரோடா அணிகளும் மோதின. இதில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது. முதலில் பேட்டிங் ஆடிய பரோடா அ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே ஆண்டில் 7 பயிற்சியாளர்கள் மாற்றம்..! என்ன நடக்கிறது?

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் டி20, ஒருநாள் அணிகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டனும் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டார்கள... மேலும் பார்க்க

விக்கெட் ஆகாமலே நடந்து சென்றது ஏன்? கிண்டலுக்குள்ளானது குறித்து மிட்செல் மார்ஷ் விளக்கம்!

பார்டர் - கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் வீசிய ஓவரில் மிட்செல் மார்ஷ் அவுட் ஆகாமலே வெளியேறியது பேசுபொருளானது. களத்தில் உள்ள நடுவரும் விக்கெட் கொடுக்க மிட்செல் மார்ஷ் ரிவிவ் எடுக்... மேலும் பார்க்க

தீவிர பயிற்சியில் ஹேசில்வுட்..! போலாண்ட் நீக்கப்படுவாரா?

காபா ஆடுகளத்தில் வரும் டிச.14ஆம் தேதி நடைபெறவிருக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. 2ஆவது டெஸ்ட்டான அடிலெய்ட்டில் ஹேசில்வு... மேலும் பார்க்க

தேவைப்படும் அளவுக்கு பந்துவீசுவேன்: மிட்செல் மார்ஷ்

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் டிச.14ஆம் தேதி வெளியாகிறது. கடந்த செப்டம்பரில் இருந்து மிட்செல் மார்ஷுக்கு முதுகுவலி இருந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் த... மேலும் பார்க்க

147 ஆண்டுகளுக்குப் பின்.. கவாஸ்கர், குக் சாதனையை சமன் செய்வாரா கோலி?

இந்திய வீரர் விராட் கோலி 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1877 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகவிருக்கிறார். அவர் அந்தச் சாதனையைப் படைப்பாரா என ரசிகர் மத்தியில் அதிக ... மேலும் பார்க்க