தனுஷின் இட்லி கடை படத்தின் பாடல் வெளியீடு எப்போது? ஜிவி பிரகாஷ் அப்டேட்!
தனுஷின் இட்லி கடை படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராயன் படத்தை இயக்கி நடித்த நடிகர் தனுஷ், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார்.
தொடர்ந்து, இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து குபேரா படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படமாக இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.
— G.V.Prakash Kumar (@gvprakash) July 19, 2025
இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக முன்னதாக புகைப்படங்களை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.
இதனிடையே, நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீடு காரணமாக. இட்லி கடை படத்தின் வெளியீடு அக்டோபர் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது
இந்த நிலையில், இட்லி கடை படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அறிவிப்பு!