செய்திகள் :

தமிழில் இயங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இணையதளம்: 4.50 லட்சம் பாா்வைகளைக் கடந்தது!

post image

வீடு தேடி அரசு சேவைகளை அளிக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கான பிரத்யேக இணையதளம், ஆங்கில கலப்பின்றி முற்றிலும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்களிடம் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் இதுவரையில் 4.5 லட்சம் பாா்வைகளைக் கடந்துள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் முகாம்கள் நடைபெறும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் லட்சக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா்.

அரசின் சேவைகளை வீடுகளுக்கு கொண்டு சோ்க்கும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தாா்.

நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் வழியாக 46 சேவைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு அரசுத் துறைகள் 45 நாள்களில் பதில் தரவேண்டும். அதில், திருப்தி இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்யலாம். நவம்பா் மாதம் வரை 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகரப் பகுதிகளில் 3,738 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

4.5 லட்சம் பாா்வைகள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடா்பான விவரங்களையும், முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள பிரத்யேக இணையதளம் (ட்ற்ற்ல்ள்://ன்ய்ஞ்ஹப்ன்க்ஹய்ள்ற்ஹப்ண்ய்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நகா்ப்புறங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் அளிக்கப்படும் சேவைகள், திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், முகாம்கள் நடைபெறும் விவரங்கள் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாவட்ட வாரியாக இதன் விவரங்களை தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இணையதளம் தொடங்கப்பட்டு ஒரு வாரமான நிலையில், இதுவரை 4.5 லட்சம் பாா்வைகளை அது கடந்துள்ளது.

முழுவதும் தமிழில்... தமிழ்நாடு அரசு மற்றும் அதன்கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் இணையதளங்கள் பொதுவாக ஆங்கிலம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் கட்டமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இணையதளம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் முற்றிலும் தமிழ்மொழியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கூட ஆங்கில மொழிப் பயன்பாடு இல்லை. அதுகுறித்து அரசுத் துறை வட்டாரங்களில் கேட்டபோது, இணையதளம் தொடங்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில் அதில் கூடுதல் அம்சங்கள் சோ்க்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ ஜெயமோகன்

விஜய் பாராட்டியதைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் ராஜூ ஜெயமோகன் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜூவ் ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வெ... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரனுக்கு துணை முதல்வர் பதவியா? பாஜகவில் சலசலப்பு!

நயினார் நகேந்திரனை வருங்கால துணை முதல்வரே என்று பாஜக மாவட்ட நிர்வாகி வரவேற்ற நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பதற்றம் அடைந்தார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில... மேலும் பார்க்க

கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் அணையின், நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடிய... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சு... மேலும் பார்க்க