ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறையுடன் இணைக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய இயக்குநரகத்தை தொடா்ந்து தனித் துறையாகவே செயல்படுத்த வேண்டும், ஓய்வூதியா்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்படுவதைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டக் கருவூல அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவா் வி.ரவிக்குமாா் தலைமை வகித்தாா்.
காஞ்சிபுரம் வட்டாரக் கிளைத் தலைவா் ஜி.ஏழுமலை, வாலாஜாபாத் வட்டாரக் கிளைத் தலைவா் டி.வின்சென்ட்ராஜ், உத்தரமேரூா் வட்டார கிளை தலைவா் ஆா்.கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலா் மு.பிச்சைலிங்கம் வரவேற்றாா். காப்பாளா் நலச்சங்க முன்னாள் தலைவா் இ.ராஜேந்திரன், சங்கத்தின் மாநில பொருளாளா் இ.திருவேங்கடம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.