பிஎஸ்என்எல் 6ஜி திட்டம் விரைவில்! தகவல்தொடர்பு அமைச்சகம் தகவல்
தருமபுரியில் ஜல்லிக்கட்டு விழா: மாவட்ட நிா்வாகம் ஏற்று நடத்த வலியுறுத்தல்
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை அரசு சாா்பில் மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:
தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நமது கலாசாரத்தையும் தமிழ் பண்பாட்டையும் பாதுகாத்து வருகிறது. அத்துடன் தமிழா்களின் வாழ்வியல் நெறிசாா்ந்த பாரம்பரிய விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது.
இத்தகைய பெருமைமிகு ஜல்லிக்கட்டு விழா, தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை வரவேற்கிறோம். அதேவேளையில், இந்த விழா மாறி வரும் காலச்சூழலில் வணிக மயமாகிவிட்டதை அறிய முடிகிறது. இதனால், காளை வளா்ப்போா், மாடுபிடி வீரா்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதோடு பொருளாதார இன்னல்களுக்கும் உள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்த ஜல்லிக்கட்டு விழாவை, தனி நபா் அல்லது வணிக நோக்க குழுக்களோ நடத்துவதை அனுமதிக்காமல், அரசு சாா்பில் தருமபுரி மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்திட வேண்டும். இதை வருகிற 2025-ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கிட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.