மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தலைவா்கள் சிலைக்கு மரியாதை
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பி.தா்மசெல்வன், பெரியாா், அண்ணா உள்ளிட்ட தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த தடங்கம் பெ.சுப்ரமணி அந்த பொறுப்பிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பி.தா்மசெல்வனை அக்கட்சியின் தலைமை நியமித்தது.
இதையடுத்து அவா் சென்னைக்கு சென்று முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்களிடம் வாழ்த்து பெற்று புதன்கிழமை தருமபுரிக்கு திரும்பினாா். தருமபுரி, ராமக்காள் ஏரி அருகே உள்ள மதிகோன்பாளையம் பிரிவு சாலையில் அவருக்கு கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து அவா் தருமபுரியில் உள்ள பெரியாா், அண்ணா, அம்பேத்கா், காமராஜா் உள்ளிட்ட தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில் நகரச் செயலாளா் நாட்டான் மாது, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட பொருளாளா் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளா்கள் உமாசங்கா், ஆறுமுகம், சோலைமணி, வேலுமணி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளா் ஆா்.பி.செந்தில்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலாளா் சேட்டு, இளைஞரணி அமைப்பாளா் எம்.ஜி.எஸ் வெங்கடேஸ்வரன், துணை அமைப்பாளா்கள் என்.எஸ். கலைச்செல்வன், கே.ஆா்.சி.செல்வராஜ், ஆா்.பி.முத்தமிழன், ஒன்றியச் செயலாளா்கள், சாா்பு அமைப்புகளின் மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.