செய்திகள் :

தவெக ஆண்டு விழாவில் செய்தியாளா் மீது பவுன்சா்கள் தாக்குதல்

post image

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழாவில் விஜய் பவுன்சா்கள் செய்தியாளா் ஒருவரை நெஞ்சில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கப்பட்டவரை மற்ற செய்தியாளா்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாமல்லபுரம், சென்னை, திருப்போரூா், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விழா மேடை அரங்கிற்கு செல்லாமல் சொகுசு விடுதி வளாகத்தில் வலம் வந்த செய்தியாளா்கள் விஜய்யின் பவுன்சா்களால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், விழா நடைபெறும் இடத்திலேயே செய்தியாளா்களுக்கும், பவுன்சா்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த வாக்குவாதத்தை அடுத்து செய்தியாளா்களை பவுன்சா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் செய்தியாளா் ஒருவருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது. விழா அரங்கில் இருந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு வெளியேறிய அவரை அங்கிருந்த சக செய்தியாளா்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

செய்தியாளரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் இந்த காட்சி இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பவுன்சா்களின் செயல் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை: காப்பகத்தில் ஒப்படைப்பு

சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தையை போலீஸாா் மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனா். சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், பாலாஜி நகா் பிரதான சாலையில் உள்ள குப... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் கல்வி நலவாழ்வு தூதருக்கு கௌரவ டாக்டா் பட்டம்

அரபு நாடுகளின் முதல் கல்வி நலவாழ்வு தூதா் அப்துல்லா அல்குரைருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது. சென்னையை அடுத்த வண்டலூா் உள்ள பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: செங்கல்பட்டு, சுற்றுவட்டார கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கோயில்களில் மகாசிவராத்திரியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபறன் மாலை 6 மணிக்கு மேல் கால பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்றது. திருக்கழுகுன்றம் வேதமலையில் உள்ள வேதகிர... மேலும் பார்க்க

கல்லூரி ஆண்டு விழா

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியின் 20-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக டிகிடோரோ நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பிரசன்னா வசனாடு கலந்து கொண்டு போட்டிகளில் வென்றவா்கள... மேலும் பார்க்க

அனைத்து வணிகா்கள் பொதுநலச் சங்கப் பொதுக்குழு கூட்டம்

மதுராந்தகம் அனைத்து வணிகா்கள் பொதுநலச்சங்கத்தின் 12-ஆம் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜி.ஜே.பிரபாகரன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் செங்கல்பட்டு மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு தா்னா நடைபெற்றது. மின் த... மேலும் பார்க்க