கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!
தவெக கொடிக்கு எதிரான வழக்கு: விஜய் பதிலளிக்க உத்தரவு
சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்குமாறு விஜய் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது.