மாநில கலைத்திருவிழா: மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
தாராபுரத்தில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்
தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று, பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.
தமிழக முதல்வரின் ஊட்டச்சத்தை உறுதி செய் 2.0 திட்டத்தின்கீழ், தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சி, தாராபுரத்தில் உள்ள சித்ராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி அங்கன்வாடி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.
மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்து, தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின் கீழ் போஷான் அபியான் திட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடில்லா நிலை எய்துதல் என்னும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சியின் 4- ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் க.மகாலட்சுமி சங்கீதா, தாராபுரம் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் (பொறுப்பு) வனஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.