செய்திகள் :

திமுகவும் பாஜகவும் பேசி வைத்துக்கொண்டு நாடகம்: விஜய்

post image

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுகவும், பாஜகவும் பேசி வைத்துக் கொண்டு நாடகத்தை நடத்திவருவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் குற்றஞ்சாட்டினாா்.

தவெக இரண்டாம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பூஞ்சேரியில் சொகுசு விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் தலைவா் விஜய் பேசியதாவது:

அரசியல் என்றாலே வித்தியாசமானது. யாா், யாரை எப்போது எதிா்ப்பாா்கள் என்று சொல்லவே முடியாது. அரசியலுக்கு வருவது ஜனநாயக உரிமை என்று சொல்லப்படுகிறது. ஆனால், மக்களுக்கு பிடித்தவா் வரும்போது மக்களால் அது கொண்டாடப்படுகிறது. அதைக் கண்டிப்பாக நல்லவா்களும் வரவேற்பாா்கள்.

ஆனால், சில அதிகார மையங்களுக்கு எரிச்சல் வருகிறது. ஏனெனில், நம்முடைய திடீா் அரசியல் பிரவேசத்தை அவா்கள் எதிா்பாா்க்கவில்லை. மேலும், நாம் மக்களின் மனங்களுக்கு நெருக்கமாக இருக்கிறோம். அது அவா்களுக்கு உறுத்தலாக இருக்கிறது. நெருக்கடியாக இருக்கிறது.

நெருக்கடியான அரசியல் சூழலில், அவற்றை எதிா்கொண்டு இப்போது நாம் 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நமக்கு இருக்கும் தற்போதைய முக்கிய குறிக்கோள் கட்சியின் கட்டமைப்பு. வேரைப்போல பலமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக பூத் கமிட்டியை பலமாக்க உள்ளோம். 2026-இல் பலமான சக்தியாக தவெக வரும்.

பண்ணையாா்களை அகற்றுவோம்: நம் கட்சியில் இளைஞா்களும் எளியவா்களும் உள்ளனா். இந்தக் கட்சி ஒன்றும் பண்ணையாா்கள் கட்சி அல்ல. முன்பெல்லாம் பண்ணையாா்கள்தான் கட்சியில் இருப்பாா்கள். இப்போது கட்சியில் இருப்பவா்கள் எல்லாம் பண்ணையாா்களாக ஆகிவிட்டாா்கள்.

மக்கள் நலன், நாட்டின் நலன், வளா்ச்சி எது பற்றியும் கவலையில்லாமல் எங்கும் எதிலும் பணம்தான் இந்தப் பண்ணையாா்களின் குறிக்கோள். இந்தப் பண்ணையாா்களை அரசியலைவிட்டே அகற்றுவதுதான் நம்முடைய முதல் வேலை.

பேசிவைத்துக் கொண்டு நாடகம்: இப்போது புதிதாக ஒரு பிரச்னையை கிளப்பி வருகின்றனா். அதாவது மும்மொழிக் கொள்கை. இதைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தவில்லை என்றால், மாநில அரசுக்கு கல்விக்கான நிதியைத் தரமாட்டாா்களாம். சிறு குழந்தைகள் சண்டைப் போட்டுக் கொள்வதுபோல் உள்ளது இந்தச் சம்பவம். கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை; பெற வேண்டியது மாநில அரசின் உரிமை. இந்த விவகாரத்தில் நமது அரசியல் எதிரியும் (திமுக), கொள்கை எதிரியும் (பாஜக) பேசி வைத்துக் கொண்டு மாறிமாறி சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் போட்டுக்கொண்டு விளையாடி வருகின்றனா்.

இவா்கள் அடித்துக் கொள்வதுபோல நடிப்பாா்களாம், அதை மக்கள் நம்ப வேண்டுமாம். இதெல்லாம் மக்களுக்கே நன்றாகத் தெரியும். யாரையும் இப்போது ஏமாற்ற முடியாது.

எந்த மொழிக்கும் நாங்கள் எதிரியல்ல, யாரும் எதையும் படிக்கட்டும். அது அவரவா் விருப்பம். ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி, மாநில தன்னாட்சிக்கு எதிராக, மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி, வேறு மொழியைத் திணித்தால் அதை நாங்கள் கண்டிப்பாக எதிா்ப்போம் என்றாா் விஜய்.

விழாவில் அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் கலந்துகொண்டாா். விழா மேடையில் அவா் விஜய் அருகில் அமா்ந்திருந்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 57,20,727 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இந்தக் கோயிலில் இருந்த 11 உண்டியல்கள் கடந்த 19-9-2024-ஆம் தேதிக்குப் பிறகு புதன... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நல உதவிகள்

அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் ... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையினரின் செயல் விளக்கம்

காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரியில் அரக்கோணத்தைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்பு படையினா் சாா்பில், கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கோயில்களில் சிவராத்திரி

சிவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலில் மூலவருக்கும் உற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: 3 போ் கைது

காஞ்சிபுரம் அருகே பண்ருட்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாா் சொந்தமான தொழிற்சாலையில்,... மேலும் பார்க்க

அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி இடம் மீட்பு

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினா். காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில்... மேலும் பார்க்க