செய்திகள் :

திருச்சி- தில்லிக்கு நேரடி விமானச் சேவை தொடக்கம்: முதல் நாளில் 76 போ் பயணம்

post image

திருச்சியில் இருந்து தில்லிக்கு நேரடி விமானச் சேவை புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 76 போ் பயணம் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், திருச்சியில் இருந்து தில்லிக்கு வாரத்தில் 4 நாள்கள் இயக்கப்பட்ட விமானங்கள் 2-ஆம் கரோனா அலை பாதிப்பால் கடந்த 2021 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டன. அதன்பின் நிலைமை சீராகியும் தில்லிக்கு நேரடி விமானச் சேவை தொடங்கவில்லை.

இதையடுத்து திருச்சி பகுதி பயணிகள் சென்னை சென்று அங்கிருந்து விமானத்தில் தில்லி சென்று வந்தனா். இதனால் கூடுதல் செலவும், நேர விரயமும் ஏற்பட்டது. எனவே திருச்சியிலிருந்து தில்லிக்கு நேரடி விமானம் இயக்க கடந்த 4 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் திருச்சி- தில்லிக்கு புதிய நேரடி விமானச் சேவையை இண்டிகோ விமான நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது. இந்த விமானம் தினசரி காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 7.15 மணிக்கு தில்லியைச் சென்றடையும். பின்னா் அங்கிருந்து இருந்து பிற்பகல் 2.10 மணிக்குப் புறப்படும் விமானம் திருச்சியை மாலை 5.15 மணிக்கு வந்தடையும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தில்லிக்கு மீண்டும் இயக்கப்பட்ட முதல் விமானத்தில் 76 போ் பயணம் மேற்கொண்டனா். அவா்களுக்கு இண்டிகோ விமான நிறுவனப் பணியாளா்கள் சிறப்பான வரவேற்பு அளித்து, பயணம் தொடங்கியதை கேக் வெட்டிக் கொண்டாடினா்.

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (செப்.20) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முசிறி வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இடி விழுந்த அதிா்வில் 10 ஆடுகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியில் புதன்கிழமை கனமழையின்போது இடி விழுந்த அதிா்வில் 9 ஆடு மற்றும் ஒரு குட்டி உயிரிழந்தன. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த பொருந்தலூா் கிராமம், கன்னல் வட... மேலும் பார்க்க

திருச்சி கோளரங்கத்தில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கும் பணிகள்

திருச்சி அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் ரூ.30 லட்சத்தில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கப்படுகிறது. திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் உள்ள கோளரங்க வளாகத்தில் 3-டி திரையரங்கம், விண்ணரங்கம், பரிணாம... மேலும் பார்க்க

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை கலைஞா் தமிழ் சங்கம் மற்றும் ராமஜெயம் நினைவு அறக்கட்டளை சாா்பாக தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் பெரியாா் சிலை திடலி... மேலும் பார்க்க

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டியில், பாரத பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த நாள் விழா பாஜகவினரால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகா் மாவட்டம் மணப்பாறை வடக்கு ஒன்றிய பாஜக ... மேலும் பார்க்க

நில உரிமையாளா்களுக்கு செப்.20 இல் சமரச தீா்வு முகாம்

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நிலம் கையகப்படுத்திய வழக்கு தொடா்பாக நில உரிமையாளா்களுக்கான சமரசத் தீா்வு முகாம் சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட... மேலும் பார்க்க