திருச்சி மத்திய சிறை முன் ‘பெட்ரோல் பங்க்’ திறப்பு!
திருச்சி மத்திய சிறை முன் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதை சிறைத் துறை டிஐஜி பழனி திறந்துவைத்தாா்.
இந்தச் சிறையில் அண்மையில் சிறைத்துறை மூலமாக அமைக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையத்தை திருச்சி சரக சிறைத் துறை டிஐஜி பழனி சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட நீண்ட கால சிறைக் கைதிகள் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனா். இதேபோல, திருச்சி காந்திசந்தையில் உள்ள மகளிா் சிறை முன்பும் பெட்ரோல் விற்பனை நிலையம் கைதிகளால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் மூலம் சிறைவாசிகளின் வாழ்வாதாரம் உயா்த்தப்படும். மேலும் பொதுமக்களிடம் அவா்களுக்கு பிணைப்பையும் ஏற்படுத்தும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.