செய்திகள் :

திருச்செந்தூர்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை; மகிழ்ச்சியில் பக்தர்கள்!

post image

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

மேலும் இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயிலின் முன்புள்ள கடற்கரை, பிரகாரம் பகுதி மற்றும் வள்ளி குகை போன்ற பகுதிகளையும் கண்டு ரசிப்பது வழக்கம். 

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் ரூ.200 கோடி மற்றும் தமிழக அரசின் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில், திருக்கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருந்திட்ட வளாகப் பணிகள் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

வள்ளி குகை
வள்ளி குகை

இந்தத் திட்டத்தின் கீழ் கோயிலின் அருகேயுள்ள வள்ளி குகையும் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 7-ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்தது.

ஆனால், அந்தச் சமயத்தில் இந்த வள்ளி குகை பராமரிப்புப் பணி நிறைவு பெறவில்லை. இதனால் பக்தர்கள் வள்ளி குகையைப் பார்க்கவும் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்று இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்தக் குகையின் உள்ளே முருகன் மற்றும் வள்ளி புராணத்தைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மற்றும் சிலைகள், முருகன் வயதானவர் போன்ற தோற்றம், முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

குகையின் முன் 24.5 அடி நீளமும். 21.5 அடி அகலமும் கொண்ட 16 தூண்களுடன் கூடிய மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குகையின் வழியாக ஒரு குறுகிய பாதை மண்டபத்தையும் கருவறையையும் இணைக்க இருந்தது. தற்போது கூடுதலாக கிழக்கு நோக்கி புதிதாக ஒரு பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

வள்ளி குகை
வள்ளி குகை

இதனால் ஒருவழியாக பக்தர்கள் சென்று மறுவழியில் பக்தர்கள் வெளியே வரலாம். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த வள்ளி குகை மீண்டும் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

வள்ளி குகையில் அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பக்தர்கள் சந்தன மலையின் அருகில் நின்று குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

ஏழு மாதங்களுக்குப் பிறகு வள்ளி குகைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையின் உச்சியில் நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண... மேலும் பார்க்க

``இதுவரை 3347 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு'' - திருப்பரங்குன்றம் குடமுழுக்கு குறித்து சேகர் பாபு

முருகக்கடவுளின் முதல் படைவீடான உலகப்புகழ் பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலையில் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெ... மேலும் பார்க்க

வேண்டியதை எல்லாம் நிறைவேற்றித் தரும் போடிநாயக்கனூர் சுப்ரமணிய சுவாமி; திருவிளக்கு பூஜைக்கு வாங்க!

வேண்டியதை எல்லாம் நிறைவேற்றித் தரும் போடிநாயக்கனூர் சுப்ரமணிய சுவாமி; திருவிளக்கு பூஜைக்கு வாங்க! 2025 ஜூலை 25-ம் தேதி மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. அதுகு... மேலும் பார்க்க

திருச்செந்தூர் குடமுழுக்கு: வீடுகள் தோறும் வழங்கப்பட்ட பிரசாத பைகள்; உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூல... மேலும் பார்க்க

கோலாகலமாக நடந்த திருச்செந்தூர் குடமுழுக்கு; 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ளது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு விழா ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் குடமுழுக்கு: குவியும் முருக பக்தர்கள்; ஓங்கி ஒலிக்கும் அரோகரா கோஷம்!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. யாக சாலை ... மேலும் பார்க்க