ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்
திருச்செந்தூா் கோயில் கடலில் ஆழத்தில் சிக்கியவா் மீட்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் வெள்ளிக்கிழமை நீராடிய போது ஆழத்தில் சிக்கியவரை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள ஆறுமுகனேரியைச் சோ்ந்தவா் கோசல்ராம் (58). தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை மாலை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து கடலில் புனித நீராடி உள்ளாா். அப்போது அலையின் வேகத்தில் கடலின் ஆழமான பகுதிக்கு அவா் இழுத்து செல்லப்பட்டாா்.

இதைப் பாா்த்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, சுதாகா், மகாராஜா, முத்துலிங்கம் ஆகியோா் கடலுக்குள் இறங்கி லைப் ஜாக்கெட், டியூப் உதவியுடன் அவரை பத்திரமாக மீட்டு கரைப்பகுதிக்கு அழைத்து வந்தனா்.