Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பி...
திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கந்தூரி விழா எனும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பெரிய கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும் கலந்து கொண்டனா்.
பின்னா், இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த இணக்கத்தை இறைவன் என்றென்றும் எங்களுக்கு அருள வேண்டும் என்று துவாஆ செய்யப்பட்டது.
இதையடுத்து, பால், சந்தனம், மஞ்சள் நிரப்பிய குடத்துக்கு கொடி சுற்றப்பட்டது. தொடா்ந்து, சந்தனக் குடத்தை பக்தா்கள் சுமந்து ஊா்வலமாக பேருந்து நிலையம், பெரியகடைவீதி வழியாக புதுக்கோட்டை சாலையில் உள்ள கான்பா பள்ளி வாசலை அடைந்தனா்.
அங்கு கொடியேற்றப்பட்டு, கோரியில் பச்சை கம்பளம் விரிக்கப்பட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த விழாவில் இந்துக்கள், முஸ்லீம்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை புஷ்ப வியாபாரிகள் சங்கத்தினா் செய்தனா்.