செய்திகள் :

திருப்பத்தூர்: பராமரிப்பின்றி பாழாகும் பூங்கா; கூடாரமாக்கி கொண்ட சமூக விரோதிகள்- கண்டுகொள்ளுமா அரசு?

post image

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அணை அருகில்  இந்த சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா நீர்வளத்துறை சார்பில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் பணிகள் முடிக்கப்பட்டு சில ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கு, செயற்கை நீர் ஊற்றுகள், நடைபாதை, ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளது.

மேலும், சிறுவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் மான், மயில், இரட்டை காளைகள், சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட பல விலங்குகளின் சிலைகள் உள்ளது. மேலும், பெரியவர்களுக்காகப் பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொழுதைப் போக்க‌ நிழற்குடைகளுடன் கூடிய நாற்காலிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த பூங்கா கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும், பூங்காக்களில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதுதவிர, விலங்கு சிலைகளின் கொம்புகள், தலை, வால் ஆகிய பகுதிகளை சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். ஊஞ்சல், ராட்டினம் ஆகியவை அறுந்து கீழே விழுந்து கிடக்கிறது.

நடைபாதைகளின் இரு பகுதிகளிலும் செடி, கொடிகள் மற்றும் புற்கள் வளர்ந்து பாதையை ஆக்கிரமித்துள்ளது. சிலர் பூங்காவிலேயே மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். பூங்காவில் உள்ள கழிவறை மூடியே கிடக்கிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சிலர் ஆங்காங்கே சிறுநீர் கழித்து விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இது போன்ற பல காரணங்களால் பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.

ஆண்டியப்பனூர் அணையைச் சுற்றிப் பார்க்க வருபவர்களும் இது போன்ற காரணங்களால் சிறுவர் பூங்கா பக்கமே திரும்பிப் பார்க்காமல் சென்று விடுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை முறையாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க